நாராயணன் _ சிறுகதை

ஓட்டுநர் ஆன ஓனர் 

நாராயணன் தனக்கென கார் வைத்திருக்கவில்லை. தனக்கிருக்ககும் இருசக்கர வாகனத்தை மட்டுமே, அவசர தேவைக்கு பயன்படுத்தி வருபவர்.

 அவசியத் தேவை இல்லாமல் வாடகை கார் பயன்படுத்துவதில்லை. பொதுவாக  பேருந்தை மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்.

 பயணத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசியை பயன்படுத்துவதை நாராயணன் விரும்புவதில்லை. 

ஒரு நாள் அலுவலக கோப்பில் முக்கிய அலுவலரின் கையொப்பம் வேண்டி, தருமபுரியில் இருந்து சேலம் வரை வாடகை காரில் பயணிக்க வேண்டி வந்தது.

 அன்றைய பயணம் குறித்த நேரத்தில் தொடங்கியது. செல்லும் வழியில் அவ்வப்போது ஓட்டுநர் தனக்கு வந்த கைபேசி அழைப்புகளை நறுக்குத் தெரித்தார் போல, அளவுக்கு அதிகமாக பேசாமல், விவரத்துடன் முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.

 நாராயணனுக்கு அலுவலரிடம் அவசரமாக கையொப்பம் வாங்க வேண்டிய மனநிலையில் இருந்ததால், முதலில் ஓட்டுனரின் கைபேசி பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 இருந்த போதிலும் , தொடர்ந்து ஓட்டுநரின் போன் விழித்துக் கொண்டிருப்பதை, நாராயணனின் மன் ஏற்க்க வில்லை.

தனது பயணத்தின் முடிவின் போது ஓட்டுனரின் செயல் பற்றி அந்த நிறுவன மேலாளரிடம் கூற வேண்டும், என்ற மனநிலையில் பயணத்தை முடிக்க இருந்தார்.

 பயணத்தின் தொகை எவ்வளவு என கேட்க நினைக்கும் போது, ஓட்டுனர் ஐயா மன்னிக்கவும் வேறு வழியில்லாமல் ஒரு சிலருடன் உடனடி யாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உடனுக்குடன்  பேச வேண்டியதாயிற்று.

தாங்கள் தொடர்ந்து, எங்களுடைய நிறுவனத்தின் வண்டியை பயன்படுத்துவதால், நானே வண்டியை எடுத்து வந்திருக்கிறேன். 

இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் நான் தான் தங்களிடம் இவ்வளவு நாள் பேசி வந்தேன், என்ற போது நாராயணனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் , பயணத் தொகையை கொடுக்கும் போது மறக்காமல் நன்றி கூறிவிட்டு புறப்பட்டார்.


You may also like

No comments: