Thursday, October 6, 2011

சுண்டி இழுக்கும் நீர்விழ்ச்சி

சுண்டி இழுக்கும் நீர்விழ்ச்சி
தென்னிந்தியாவின் முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஓன்றாகவும், தருமபுரி மாவட்டத்தின் சுற்றுலாத்தாலங்களில் முதன்மையானதாகவும் விளங்கி வருவது ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சியானது, தருமபுரியிலிருந்து மேற்காக 46 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் மெக்கரா எனும் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும். காவிரி ஆறு துணை நதிகளுடன் இனைந்து, தமிழக எல்லையை வந்தடைகிறது. பிலிகுண்டு எனுமிடத்தில் தருமபுரி மாவட்டத்தில் காவிரித் தாய் கால்பதிக்கிறாள் இங்குதான் மத்திய நீர் ஆணையத்தின் தண்ணீர் அளவிடும் மையம் செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்க்கு தண்ணீர் திறந்துவிடும் அளவை, மதிப்பீடு செய்யும் மையமும் இதுதான்.

பரந்து விரிந்து கரைபுரண்டு ஓடிவரும் காவிரி ஆறு, தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தின் ஓகேனக்கல் பகுதியை வந்தடைகிறது. இங்குதான் புகையை வின்னில் பாய்ச்சும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடமாகும். ஓகேனக்கல் நீர்வீழ்ச்சியில் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்படுவர். எல்லையோர மாநிலமான கர்நாடகத்திலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்வது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வெளிநாட்டிணர் முதற்க்கொண்டு பிறமாநில சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாடு ஓட்டல் மற்றும் இளைஞர் விடுதி நடத்தப்பட்டு வருகிறது.

தருமபுரியிலிருந்து பென்னாகரம் வரை நிலப்பகுதியிலும், பின்னர் மலைப்பள்ளத்தாக்கிலும் சாலை வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை சென்றடையாலாம். தமிழகத்தில் காவிரித் தாய் கால் பதிக்குமிடம் தருமபுரி மாவட்டம் என்றாலும், இந்திய அளவில் புளோரைடு பாதிப்புக்கு உள்ளான மாவட்டப் பட்டியளில் தருமபுரி மாவட்டம் உள்ளது. குடிதண்ணீர் புளோரைடு அளவு ஒரு லிட்டருக்கு 1.5 பிபிஎம் என்ற அளவுக்குள்ளாக இருக்க வேண்டும் இந்த அளவுக்கு அதிகமானால் குடிப்பதற்க்கு பயன்படுத்தக் கூடாது. புளோரைடு பாதிப்பு இருந்தால், முன்கழுத்து கழலை, தைராய்டு சுரப்பி மற்றும் பற்களில் பழுப்பு நிற படிவம் படிதல் போன்ற பலவித பாதிப்புகள் ஏற்படுமென மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்க வேண்டிய ஓகேனக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெயரளவில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு சுமார் 1.50 கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தி வருகிறது. இப்பணிகள் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு வரும் நாளில் மக்களுக்கு பயன்படும். கர்நாடக அரசு, தமிழக எல்லையோரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தியதன் காரணமாக, தமிழக அரசு, விளித்துக்கொண்டு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முடித்திட நடவழக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. .

நீர்விழ்ச்சியில், தொடர்ச்சியாக ஓடும் காவிரி ஆற்றின் மறுபுறத்திலுள்ள கண்கவர் எழில் காட்சிகளை பார்த்து மிகழ்வுற தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுசிறு மேடைகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அனைத்து இடங்களையும் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இங்கு, நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்க்கு முன் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஓன்றாகிவிட்டது. ஆனால் மசாஜ் செய்துகொள்வதற்கு என தனியாக இடம் இல்லாத காரணத்தால், வழிபாதையையே மசாஜ் மையமாக பயன்படுத்தப்பட வேண்டியாதாகிறது. மசாஜ் செய்தபிறகு, கொட்டும் அருவியில் குளிப்பது அலாதியானதாகும் அருவி தண்ணீர் நம்மீது விழும்பொது தண்ணீரின் பலத்தை உணரும் விதமாக இருக்கிறது. குளித்தபிறகு. உடலில் இருந்த வலிகள் அனைத்தும் அகன்றதை உணர முடிகிறது. அடுத்ததாக, பரிசல் பயணம் சிறுவர்கள் முதல் அனைவரையும் சுண்டி இழுக்கும். பரிசல் சவாரி முடித்துவிட்டு வரும்போது வீர சாகசம் முடித்த உணர்வை பெருவது இதன் சிறப்பம்சமாகும். ஐந்து முதல் ஆறு நபர்கள் ஒரு பரிசலில் பயணிக்கலாம். வேகமாக ஓடும் அற்று நீரின் எதிர்திசையில் பரிசலை ஓட்டுவது திகில் கலந்த ஒன்றாகும்.

இங்கு அசைவப் பிரியர்களை அசத்தும் மீன் உணவு மிகவும் பிரசித்துபெற்றதாகும். குடும்பத்துடன் உண்டு மகிழ குடில்கள் அமைத்திருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. தருமபுரி மாவட்ட மக்கள், தங்கள் குடும்பத்தின் எந்த ஒரு விசேச நிகழ்வாக இருந்தாலும், சுற்று வட்டரத்தில் உள்ளவார்கள் குறிப்பாக இறந்தோரின் ஈமக்கரியம் நடத்த குடும்பமாக வந்துச் செல்வது வாடிக்கையான நிகழ்வாகும். ஆனால் அவர்களின் வசதிக்காக எந்த ஒரு கட்டமைப்பு வசதியையும், ஏற்படுத்தி கொடுக்கதாதது , ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதிலும், ஆண்களும் பெண்களும் நீராடியபிறகு, துணிகளை மாற்றிக் கொள்ள ஏதுவாக மறைவிடம் அமைத்துக் கொடுத்தால் மனநிறைவு அடைவார்கள். பொதுமக்களால், ஆற்றங்கரையோரங்களில் மாசுபடுவதை தடுக்க தன்னார்வலர்களை ஈடுபடுத்தி காவிரி ஆற்றை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பிலாஸ்டிக் பொருட்கள் தடை செய்திருப்பதை, முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவின் புண்ணிய நதிகளில் ஓன்றான காவிரி ஆறு, பற்பல சிறப்புகளுடன் மாவட்ட அளவில் சிறந்து விளங்கினாலும், மேலும் பல கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உலகம் போற்றும் உன்னத சுற்றுலாத் தலமாக்க, மாநில அரசம் நடுவன் அரசம் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments: