சேயிடம் (பாடம்) கற்ற தாய் _ சிறுகதை
/
0 Comments
சேயிடம் (பாடம்) கற்ற தாய்
லட்சுமியும் முத்துவும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியர்கள். முத்துவை விட லட்சுமி பொருளாதாரத்தில் வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.
இருந்த போதிலும் முத்துவின் மேல் ஏற்பட்ட பிடிப்பின் காரணமாக பெற்றோரின் மறுப்பையும் சம்மதமாக மாற்றிய லட்சுமி, முத்துவை கரம் பிடித்தார்.
முத்துவுக்கு தன் பெற்றோர்களை தன்னுடனே வைத்துக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர, வேறு எவ்வித தனிப்பட்ட ஆசையும் இல்லாதவர்.
முத்துவின் ஆசை, லட்சுமியின் மேல் ஏற்பட்ட காதல் வாழ்க்கையின் மூலம், அகப்படாமல் போய்விட்டது.
தனி குடித்தனம், அதுவும் நகரத்தில் குடும்ப வாழ்க்கையை ஒட்ட வேண்டும், என்ற ஒத்திகையின் அடிப்படையில், லட்சுமியின் குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் வாழ்க்கை பயணம் இனிதே பயணப்பட்டது.
அதற்கு அத்தாட்சியாக, இவர்கள் இல்லத்தில் வெண்ணிலா என்ற செல்ல மகள் பூத்துக் மலர்ந்தாள்.
மழலை மொழிக்கு மயங்காதவர் எவர் உலர். அதற்கு ஏற்றார் போல், முத்துவின் பெற்றோர்களும், லட்சுமியின் பெற்றோர்களும் வெண்ணிலாவின் விசிறிகளாக மாறினார்கள்.
வெண்ணிலாவின் பேச்சும் செயலும் முத்து, லட்சுமி ஆகிய இருவரையும் தாண்டி, அருகில் இருப்பவரையும் அரவணைத்துக் கொண்டது.
நாட்கள் நகர்ந்தன, வருடங்கள் ஓடின, அதனுடன் சேர்ந்து, வெண்ணிலாவும் தவழ்ந்து நடந்து ஓட ஆரம்பித்தாள்.
வெண்ணிலா தனக்கு வேண்டிய பறவையையும் அதற்கான கூண்டையும், வேண்டி விரும்பி வாங்கிக்கொண்டாள் .
அந்த பறவைகளுக்கு தேவையான உணவு தண்ணீரை தினமும் கொடுத்து வந்தாள். சில மாதங்கள் கழித்தவுடன், சிறு பறவைகளின் பெண் பறவை முட்டையிட்டது.
இரண்டு பறவைகள் இருந்த கூட்டில் பெண் பறவை சிறிய பானையில் இருந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று முட்டையை அடைகாக்க ஆரம்பித்தது.
தனிமையில் இருந்த ஆண் பறவை தான் தனிமைப்பட்டு விட்டோம் என நினைத்து, அதனை வெளிப்படுத்தும் விதமாக, புதுவிதமான ஓசையை எழுப்ப ஆரம்பித்தது.
இந்த செயல் வெண்ணிலாவிற்கு புதுமையாக தென்பட்டது.உடனே, அம்மாவை அழைத்து விவரம் கேட்டால் வெண்ணிலா.
பெரியவர்களுக்கு தெரிந்த செய்தி சிறியவர்களுக்கு தெரிந்திடாத செய்தியாகும். வெண்ணிலாவின் கேள்வியில் பிடிப்பில்லாத லட்சுமி சாதாரணமாக கூறினாள்.
பெண்குருவி முட்டையிட்டு இருக்கிறது. அதை அடைகாத்து குஞ்சு பொரிக்க, அந்த முட்டையை பாதுகாக்கும் வகையில் அமர்ந்திருக்கிறதெனக் கூறிய முத்து தன் வேலையில் கவனம் செலுத்தளானாள்.
இந்த பதில் மூலம் வேறு ஏதோ ஒன்றை அறிய முற்படும் நோக்கில் வெண்ணிலாவின் கவனம் சென்றது.
லட்சுமிக்கு வெண்ணிலாவின் கேள்வியில் விந்தை எதுவும் தெரியவில்லை. வெண்ணிலாவோ அந்த கேள்வியை வெறுமனே விட்டுவிடவும் நினைக்கவில்லை.
அன்று மாலை முத்துவும் லட்சியமையும் அவரவர் பணிகளை முடித்துவிட்டு, இரவு உணவுக்காக அமர்ந்திருந்த வேலையில், வெண்ணிலா தனது பள்ளிப் பாடத்தை முடித்திருத்தாள்.
இந்த நேரத்தில் தனது மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை அம்மாவிடம் கேட்களானாள். பெண் குருவி முட்டையை ஏன் அடை காக்க வேண்டும்? ஆண்குருவி தனியாக ஏன் அலைந்து கொண்டிருக்கிறது? இது ஏனோ வித்தியாசமாக எனக்கு தென்படுகிறது, இதைப் பற்றி விரிவாக கூறவும் என்றாள் வெண்ணிலா.
இப்போதும் வெண்ணிலாவின் கேள்வியில் வேறு எதுவும் இல்லை என்பது போன்ற தொனியில் லட்சுமியின் பதில் இருந்தது.
பெண் பறவை முட்டையிட்டுள்ளது, அதை அடைகாத்து, அதில் குஞ்சு பொரிக்கும் வரையில், அந்த முட்டையை பாதுகாக்கும், என்று கூறிவிட்டு தன் கவனத்தை தன் போக்கில் திருப்பிக் கொண்டாள் முத்து.
இப்போது வெண்ணிலாவிற்கு ஏதோ பொரி தட்டியது போல் அடுத்த கேள்வியை தொடுத்தாள்.
இந்தப் பறவை தனது முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கும், அதுவரை அந்த முட்டையை தன் பாதுகாப்பில் வைத்திருக்கும், என்று கூறினாயே, அதுபோல் நாம் ஏன் நம் உறவுகளுடன் ஒன்றாக வாழவில்லை என்று அம்மாவை கேட்டாள் வெண்ணிலா.
லட்சுமிக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. திடீரென வெளிவந்த வெண்ணிலாவின் கேள்வி முத்துவை ஒரு நிமிடம் திக்கு முக்காட வைத்து விட்டது.
பல்வேறு சூழல்களில், சிறு பிள்ளைகளின் பேச்சு பெரியவர்களுக்கு புரியாமலேயே போய்விடுகிறது.
ஏனென்றால், நாம் வளர்ந்து விட்டோம், நமக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் நம் செயல்பாடுகள் அமைந்துவிடுகின்றன.
லட்சுமிக்கு ஏதோ பொரி தட்டியது போன்ற உணர்வு மேலோங்க வெண்ணிலாவிடம் வந்து அமர்ந்தாள்.
குருவி முட்டை இட்டு அடைகாக்கிறது, அதை நம் குடும்பப் பின்னணியுடன் எவ்வாறு நீ தொடர்புபடுத்தி பேசுகிறாய் சற்று விளக்கமாக சொல் என்று முத்து கேட்டவுடன் வெண்ணிலா தொடர்ந்தாள்.
நீங்கள் இருவரும் அலுவலகத்திற்கு சென்று விடுகிறீர்கள், நானும் பள்ளிக்கு சென்று வருகிறேன்.
மாலையில் ஒன்றாக வீட்டில் இருக்கிறோம். ஆனால், தாத்தாக்கள் பாட்டிகள் அவரவர் வீட்டில் எங்கேயோ இருக்கிறார்கள்.
நாம் எல்லோரும் ஓர் இடத்தில் ஏன் வாழக்கூடாது? தாத்தாக்களுடனும் பாட்டிகளுடனும் மற்ற சொந்தங்களுடனும் இருக்கும்போது, என்னால் சொல்ல முடியாத மகிழ்ச்சி என்னுள் ஏற்படுகிறது. அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
சிறு குருவி தன் முட்டையை அடைகாக்கும் பெண் குருவி, தனியாக போய்விட்டதனால், ஆண் குருவி தவித்துக் கொண்டிருப்பது போல் என் மனம் நம் உறவுகளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறது என்று வெண்ணிலா கூறினாள் .
ஏதோ வேலையில் கவனமாக இருந்த முத்து அம்மாவும் மகளும் நீண்ட நேரமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அருகில் வந்து அமர்ந்தார்.
வெண்ணிலாவின் கேள்வி அதனைத் தொடர்ந்த பேச்சு, லட்சுமிக்கு எங்கோ பொறி தட்டியது போன்ற உணர்வை உண்டாக்கியது.
லட்சுமி பேசத் தொடங்கினாள், வயதானவர்கள் நம்முடன் இருந்தால் நம்முடைய செயல்பாடுகள் பாதிக்கும் என்று தவறாக நினைத்து அவர்களை நம் வீட்டில் இல்லாமல் செய்து விட்டேன்.
ஆனால் , என் செல்ல மகள் எனக்கு நன்றாக பாடம் புகுத்தி விட்டாள். உடனே நாம் பெற்றோர்களை அழைத்து வந்து நம் வீட்டில் வைத்துக் கொள்வோம் என்று முத்துவிடம் கூறினாள்.
முத்துவிற்கு மனதில் மகிழ்ச்சி பெருக்கு அதிகரித்த போதிலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் விருப்பம் போல் செயல்படு என்று லட்சுமியிடம், பட்டும் படாமல் கூறினார் முத்து.
ஏற்கனவே பலமுறை தன் பெற்றோர்களை அழைத்து வந்து தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்று லட்சுமியிடம் கூறிய போதிலும், அது எடுபடாமல் போன ஏமாற்றத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு சென்றவர் முத்து.
தன் மகள் மூலம் இப்படி ஒரு இன்பமயமான திருப்பம் தன் வாழ்க்கையில் தென்படும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அதிலும், நம்மை விட, மனிதர்களை விட, அறிவில் குறைந்த பறவைகள் மூலம், இப்படி ஒரு பாடத்தை வெண்ணிலா வழியாக, லட்சுமி பெற்றதை முத்து பெருமிதத்தோடு எண்ணி , தன் செல்ல மகளான வெண்ணிலாவை, முத்து வாரி அனைத்து கொண்டார்.