விவசாயியும் கலைஞனே
விவசாயி சேற்றில் உழன்று ஏர்பிடித்தால்தான், குளிர்சாதன அறையில் சொகுசு வாழ்வு வாழ்பவர் சாதம் சாப்பிட முடியும். இதன் முக்கியத்துவம் அறிந்தே வான் புகழ் வள்ளுவர் உழவு-க்கென்றே தனி அதிகாரம் அமைத்து பத்து குறள்களில் சிறப்பித்துள்ளார்.
விவசாயி சேற்றில் உழன்று ஏர்பிடித்தால்தான், குளிர்சாதன அறையில் சொகுசு வாழ்வு வாழ்பவர் சாதம் சாப்பிட முடியும். இதன் முக்கியத்துவம் அறிந்தே வான் புகழ் வள்ளுவர் உழவு-க்கென்றே தனி அதிகாரம் அமைத்து பத்து குறள்களில் சிறப்பித்துள்ளார்.
சழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை - குறள் 1031.
ஆனால் இவையெல்லாம் ஏட்டளவில் மடடுமே இன்றுவரை இருந்துவருகிறது. சாதாரன பெட்டிக்கடையில் ஆரம்பித்து சிறு பெறும் தொழிற்ச்சாலை வரை, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயித்துக் கொள்வார்கள். இந்த பாவப்பட்ட விவசாயி விளைவிக்கும் பொருட்களுக்கு சம்மந்தமில்லாத யாரோ ஒருவர் சொல்லும் விலைக்கு தன்பொருளைக் கொடுக்க வேண்டும். உழவனுக்கோ வேறுவழி தெரியாததால், தன் அவசர தேவைகளின் காரணமாக, ஏதோ ஒருதொகை கிடைத்தால் போதுமென இருந்துவிடுகிறான். எங்கோ ஒரு விவசாயி புதுமையான முறையில் விவசாயத்தில் மாறுதல் ஏற்படுத்தினாலும் சரியான அங்கீகாரம் இல்லை. பிற தொழிலில் சிறு மாறுதல் ஏற்பட்டாலும் அனைத்து ஊடகங்களும் முட்டிஅடித்துக்கொண்டு செய்திகளை வெளியிடும்.
பெருந்தொழில் புரிவோர் தனக்கிளுக்கும் நட்பின் பின்னனியில் தான் செய்திருக்கும் செயலுக்கு சிறந்த தொழில் அதிபர் என மேடையேறி பட்டம் பெறுவார்; என்பது சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்துக் கொண்டு விவசாயிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். திரைப்படத்துறை பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட தொழில். இதுவும் ஒரு வகையான வர்த்தகம்தான், ஒவ்வொரு வருடமும் சிறந்த திலைப்படம், சிறந்த பாடகர், நடிகை என பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பார்கள். நாட்டின் உயரிய விருதுகளான பத்மப+சன், பத்மசிஸ்ரீ வழங்கி சிறப்பிப்பார்கள். இது நாள் வரை எத்தனையோ முன்னோடி திட்டங்களை செயல்படுத்திய விவசாயிகளை விருது கொடுத்து ஊக்கப்படுத்தியது இல்லை. விவசாயியும் ஒரு கலைஞன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே இதன் கருத்தாகும்.
ஒரு தொழிற்சாலை அமைப்பதாக இருந்தால் கேட்டவுடனே மின் இனைப்பு கிடைத்துவடும். தனியாக ஒரு மின்மாற்றியை மின்சாரத்துறை சார்பில் அமைத்து கொடுப்பார்கள். ஒரு விவசாயி தன் கிணற்றில் மின்மோட்டார் இயக்க விண்ணப்பித்தால் பத்து முதல் இருபது வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். விவசாய தொழிலை நம்பியுள்ள இந்திய நாட்டில் விவசாயத்திற்க்கு கொடுக்கும் முன்னுரிமையை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment