Thursday, October 6, 2011

தமிழில் திரைப்படப் பெயர்-வரிவிலக்கு தேவையா?

தமிழில் திரைப்படப் பெயர்-வரிவிலக்கு தேவையா?
தமிழத் திரைப்படத்திற்கு, தமிழில் பெயர் வைத்தால், தமிழக அரசின் வரிச்சலுகையைப் பெறலாம். பல்வேறுபட்ட மக்களுக்கு, பல்வேறு சலுகைகளை அளித்துவரும் தமிழக அரசு, அண்மை காலமாக திரைப்படத் தயாரிபாளர்களுக்கு இந்தப் புதிய சலுகையை அளித்து வருகிறது.


தமிழ்த் திரைப்படங்களுக்கு விதவிதமாக ஆங்கிலப் பெயர்களை, சூட்டுவதைத் தலையாயக் கடமையாக கொண்டார்கள் நம் திரையுலக பிரம்மாக்கள். பலத் திரைப்படங்கள் வெளிவந்த வேகத்திலேயே காணாமல் போய்விகின்றன. அண்மை காலமாக, தமிழக அரசின் வரிச்சலுகையைப் பெறும் நோக்கத்திற்காக, திரையுலகினர் தமிழ்ப் பெயர்களை சூட்டி வருகிறார்கள். இதனால் வேறுமொழிகளில் இருந்துத தமிழக்கு ரீமேக் செய்யப்படும் டப்பிங் படங்களும் வரிச்சலுகையைப் பெற்று வலம் வந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக தெலுங்கு மொழித் திரைப்படத்தை தமிழாக்கம் செய்யும் போது எம்டன் மகன் என பெயரிட்டார்கள். அந்த சமயத்தில் தமிழக அரசின் வரிச்சலுகை அறிவிப்பு வெளியானது. உடனடியாக எம்டன் மகன் எனும் திரைப்படப் பெயரை “எம்மகன்” என திருத்தம் செய்துவிட்டார்கள். இந்தச்செயல் மக்களை ஏமாற்றுதாகவும்;, அரசின் வரிச்சலுகையைப் பெறுவதற்காக செய்யப்பட்ட மாறுதலாகவே எண்ணத் தோன்றுகிறது.
தமிழில் பெயரை மட்டும் வைத்துவிட்டால் பெரிய மாறுதலை உருவாக்கிவிடுவார்களா திரையுலகினர்? தமிழ்ப் பண்பாட்டை விவரிக்கும் திரைப்படத்திற்கு வரிச்சலுகை தரலாம். நாட்டுப்பற்றுள்ள தமிழ்திரைப்படத்திற்கு வரிச்சலுகை தரலாம். தமிழ் அறிஞர் பெருமக்களின் வாழ்க்கையை படமாக்குபவர்களுக்கு வரிச்சலுகை தரலாம். உதாரணமாக, பாரதி, பெரியார் போன்ற சரித்திரமானவர்களின் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம.; அதைவிட்டு, பெறுமகன தமிழில் பெயர் வைத்தால் போதும.; வரிச்சலுகை அளிப்பதை தமிழக அரசு மறுப்பரிசீலனை செய்து தேவையான திருத்தம் செய்யப்படவேண்டும். தங்கத் தமிழில் பெயரை மட்டும் வைத்துவிட்டு, பத்து சண்டைக்காட்சிகள், அரைகுறை ஆடையுடன் நான்கு பாடல்கள், தேவையற்ற கிண்டல் கேலி வசனங்கள் என தயாரிக்கும் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடிவதில்லை.


பசுந்தோல் போர்த்திய புலி என்பதால், ஆடுகளை அடித்துச் சாப்பிடாமல் இருந்துவிடுமா? அதுபோல் நல்ல கதையம்சம் இல்லாமல் பெயரில் மட்டும் தமிழ் வார்த்தை இருந்தால், தமிழுக்கு எந்த பயனும் உண்டாகப் போவதில்லை. அண்மையில் வெளியான சிவாஜி திரைப்படப்பெயரும் இந்தச்சர்சையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்பெயரா, வடமொழிப் பெயரா என பட்டிமன்றமே நடந்துவருகிறது. திரைப்படத்தைத் தயாரிப்பவர்கள் அதனைப் பார்பவர்கள் பயனடையும் விதத்தில் ஏதாவது விசயம் இருக்கிறதா? என்று என்னுவதை விட்டுவிட்டு, திரைப்படப்பெயர் எந்த மொழி எனும் தேவையற்ற சர்ச்சைகளில் இறங்குவது சரியானதல்ல.


அரசாங்கத்தின் சலுகையால் பயனடைவது ஒருபுறம் இருந்தாலும், சரியான நோக்கத்திற்காக இந்தச் சலுகை அளிக்கப்படுகிறதா என எண்ணிப் பார்க்கவேண்டும். ஆகவே, தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டுவரும் இந்த வரிச்சலுகையை மறுபரிசீலனை செய்து தக்க திருத்தங்களுடன் தமிழர் பண்பாடு மலர வழிவகை செய்யவேண்டும்.

No comments: