Thursday, April 23, 2009

ஊர்தோறும் உதவும் உள்ளங்கள்

















ஊர்தோறும் உதவும் உள்ளங்கள்






மனிதநேயம் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் மனித நேயம் மிக்கவர்களாக திகழ்ந்தால், ஊர் தோறும் உதவிடும் உள்ளம் படைத்தவர்கள் உருவாவார்களென வேலூர் உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் தமதுசிறப்புறையில்விளக்கினார்.






தருமபுரி மாவட்டத்தில் 18 - 4-2009 அன்று உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பின் தொடக்க விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் கூறியதாவது. இயற்க்கையிலேயே ஒவ்வொரு மனிதருள்ளும் உதவி செய்யும் உள்ளம் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விகிதாசாரத்தின் அடிப்படையில் மாறுபடுமே தவிர, மனிதர்கள் அனைவருமே மனித நேயம் மிக்கவர்கள் தான். ஆரம்பப் பள்ளிகளில் முன்பு இருந்த மாதிரி, நீதிபோதனை வகுப்பு தொடங்கப்படவேண்டும். அப்போதுதான் இளைய சமுதாயத்தினர் பண்பட்ட மனநிலையுடன் கூடிய சமுதாயச் சிந்தனைக் கொண்ட மனிதர்களாக உருவெடுப்பார்கள்.
பளளிப் பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை தவறாமல் மாணவர்களிடத்தில் வளர்க்க வேண்டும். ஆசிரியப் பெருமக்கள் இந்த அடிப்படை விவரங்களை மாணவர்களிடம் கொண்டுசெல்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பொது உண்டியல் ஒன்றை வைத்து, சேமிக்க தொடங்கலாம். அந்தந்த பள்ளிகளில் உதவி தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து அந்த சேமிப்புத்தொகையை பயன்படுத்தி, சிறு சிறு உதவிகள் செய்து வந்தோமானால், மாணவர்களிடையே உதவிடும் செயல் பசுமரத்தானி போல் பதிந்துவிடும்.
ஒவ்வொருவரும், அவரவர்வருமானத்திலிருந்து ஒரு சிறுத் தொகையை சேமித்து, அந்தத்தொகையை, பிறருக்கு உதவிட முன்வரவேண்டும். உதவி செய்ய நினைத்துவிட்டால் பணம் ஒரு பொருட்டாகவோ, தடையாகவோ எப்போதும் இருப்பதில்லை. ஒருவருக்கு பணமாக கொடுத்துதான் உதவி செய்ய வேண்டுமென்ற நிலை இல்லை. மனித நேய பணிகள் செய்திட பல வழிகள் உள்ளன. என்னுடைய ஆரம்ப காலங்களில் யாரிடமும் பணமாக கேட்டதில்லை. பழைய தாள்களை கொடுங்கள் என்று பலரிடமும் கேட்டு பெற்றுக் கொள்வோம். இந்த குப்பையிலிருந்து இரண்டு இலட்சத்திற்க்கும் அதிகமான தொகையை பெற்றோம் என்பதுதான் விந்தையான செய்தி அதனால் , பிறருக்கு உதவி செய்ய நினைத்தாலே போதும், ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முடியும்.
தருமபுரி மாவட்ட தலைவர் கே. எ.மாணிக்கம், தருமபுரி மாவட்டத்தில் எந்தெந்த வழிமுறைகளில் உதவிட முன்வருவோரையும், உதவி வேண்டுவோரையும் ஒருங்கினைப்பது என்று விவரித்தார். மேலும் இவ்வமைப்பின் செயலர் திருமதி சந்திரா ஆதிமூலம் கூறுகையில், அமைப்பினை உருவாக்கியபோது சந்தித்த சுவையான தகவல்களை பார்வையாளர்களுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் நலச் சங்க மாநில தலைவர் அத்தியண்ணா அவர்கள் உடல் ஊணமுற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வரும், அரசின் நலதிட்டங்கள் பற்றியும், அவற்றை பெருவதற்க்கான வழõமுறைகள் பற்றியும் கூறி ஒருவரின் முன்னேற்றத்திற்க்கு என்றுமே ஊனம் ஒரு தடையல்ல, மாறாக ஊனத்தால் உயர முடியும் என ஆனித்தரமான கருத்துக்களை பார்வையாளர்களிடம் விதைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியோர்களுக்கும், பயனாளிகளுக்கும் உணவு-, உடை, அரிசி உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்கினார்கள்.

No comments: