தொன்மை வாய்ந்த தமிழ்மொழி
ஒரு பொது இடத்தில் இருவர் மளையாலத்தில் பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் கேரளத்தைச் சார்ந்தவர்களென உணரலாம். இருவர் தெலுங்கில் உறையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் ஆந்திரத்தைச் சார்ந்தவர்களென உணரலாம். இருவர் கன்னடத்தில் கலந்துரையாடினால். அவர்கள் கர்நாடகத்தைச் சார்ந்தவர்களென கூறலாம். ஆனால், இருவர் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் வெளிநாட்டுக்காரர்களென எண்ணலாகாது. அவ்விருவரும், நிச்சயமாக தமிழர்களாகத்தான் இருப்பர்கள். தமிழ் நம் தாய்மொழி, அம்மொழியில் பேசினால் நாம் தரம் குறைந்தவர்களாக கணக்கிடப்படுவோமென, தப்பு கணக்குப் போட்டு, தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் தவிர்க்கிறார்கள் தமிழக மக்கள் என என தமிழ் வளர்ச்சித்துறை முன்னால் இயக்குநர் வை.கண்ணபுரக்கண்ணன் தமதுறையில் கூறினார்.
தருமபுரித் தமிழ்ச் சங்கத்தின் (17- 4 - 2009) முப்பதாண்டு நிறைவு விழா, முப்பால் முப்பது மலர் வெளியீட்டு விழா þவில் சிறப்புறையாற்றும்போது “தமிழ்வளர்ச்சி” எனும் தலைப்பில் மேலும் கூறியதாவது . தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்நதாகும். உலக எழுத்தில் அளவõல் சுமார் 6390 மொழிகள் பலதரப்பு மக்களிடம் பழக்கத்தில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், எல்லா மொழிகளும், வளமான மொழி என்று கூறõவிட முடியாது. பல மொழிகள் பேச்சுவாக்கில் இருந்தாலும், நெடுங்காலம் நீடித்து நிலைக்கும் தன்மை அற்றனவாக இருக்கின்றன. தமிழ் மொழி வளம் மிக்க மொழி, மனித உணர்வுகளுடன் கூடிய மொழி, மனிதம் போற்றும் மொழியாகும். சொல் வளமிக்க மொழி, தமிழுக்கு இணையான மொழி உலகத்தில் எங்குமில்லை. தமிழ் மொழி வெரும் சொற்களின் கலவையாக இருக்கவில்லை. மாறாக இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் கலவையாகும். மற்ற மாநிலங்களில், அவர்களின் தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு தமிழர்கள் தருவதில்லை. அன்னிய மொழியான ஆங்கில மொழி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருக்கிறது. அன்னை மொழியின் மகத்துவம் புரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம். ஒவóவொரு மாட்டத்திலுமó தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம், அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி கையாளப்படுகிறதா என கண்காணிக்கும் அவலநிலை இன்றும் இருக்கிறது. உலகத்தில் எங்கு சென்றாலும், அவரவர் கையொப்பம், அவரவர் தாய்மொழியில் தான் இடுவாôóகள். ஆனால், நம் தமிழ் மக்கள் தமிழில் கையொப்பமிட தெரியவில்லை என கூறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
எந்த ஒரு செயலும் பழகப்பழக வளக்கமாக மாறுவதை அறிகிறோம். அப்படியிருக்க தமிழில் கையொப்பம் இடுவதையும், தமிழில் பேசுவதையும் அவமானமாக ஏன் நினைக்க வேண்டும்? உன்னத மொழியான தமிழில் எல்லா வளமும் ஒன்றியிருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் உள்ள மொழி தமிழ்மொழி. ஒவ்வொரு சொற்களையும் பலவித சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய வகையில் பொருள்படும் படியாக, பல சொற்கள் தரும் அமுதமான மொழி தமிழ்மொழி. உதாரணத்திற்க்கு சொன்னான் என்ற ஒரு சொல்லை நாற்பத்தி மூன்று விதமாக சொலóவதற்க்கு ஏற்ப சொல் வளமிக்க மொழி தமிழ்மொழி.
எந்த ஒரு வேற்றுமொழி சொல்லானாலும், அதற்க்கு ஏற்ப தக்கதொரு சொல்வளம் நிறைந்தது நம் தமிழ்மொழி. உலகெங்கிலும் இலங்கை, மலேசியா, உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளிலும் தமிழ்மொழி பேசப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள ஐம்பத்து ஆறு மொழிகளில் தமிழ்மொழியும் அடங்கும். மேலும், உலகமெங்கும் இருபத்து ஏழு பல்கலைகழகங்களில் பாடமொழியாகவும் இருந்து வருகிறது. பாரம்பறியமிக்க பண்டைய மொழியான தமிழ் மொழியில் எழுதவோ பேசவோ தயங்குகின்ற நிலை மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.
உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறள் சாதி, மதம், இன உணர்வுகளுக்கு அப்பார்பட்டு பொதுவுடைமை கருத்துக்கள் மிக்க நூலாகும். இந்தத் திருக்குறளில் வாழ்வினை மேம்படுத்தும் அத்துனை கருத்துக்களையும் உள்ளடக்கிய அறியதொரு நூலாகும்.
தமிழ்மொழி மட்டும் வேறொரு மாநில மக்களுக்கு தாய்மொழியாக அமைத்திருக்குமானால், உலக அளவில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கும். தமிழ்மக்கள் பிறமொழிகலப்பில் தமிழை சிதறடித்துக் கொண்டிருப்பதனால், தமிழில் படிப்பதற்க்கும், எழுதுவதற்க்கும் சட்டம் இயற்றி, கட்டாயப்படுத்தும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.
உலக மக்கள் தொகை மிகுதியுடைய நாடான சீனாவில், சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அங்குள்ள மளிகை கடையில், நூறு ரூபாய்க்கு ஏதேனும் பொருட்கள் வாங்கினால் குறைந்தபட்சம் ஐந்து ரூபாய்க்கு புத்தகங்களை இருக்கும். அந்தப் புத்தகத்தில் அன்றாட நிகழ்வுகளுடன், அறிவியல் செய்திகளை உள்ளடக்கிய பொது அறிவு நூலாக கொடுப்பார்கள். இதன் மூலம், நாட்டு மக்கள் அறிவை வளர்த்து, அந்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அத்தகைய நிலை நம் நாட்டிலும் மலரவேண்டும். நம் தமிழ்மொழி உலகில் உயர்ந்த நிலையை அடைய ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களிடம் தமிழினó இனிமையை புகட்டிட வேண்டும்.
தருமபுரித் தமிழ்ச் சங்கத்தி-ன் முப்பதாண்டு நிறைவு விழாவின் முத்தாய்ப்பாக “முப்பால் முப்பது” எனும் மலர் வெளியிடப்பட்டது. இம் மலரில் தமிழறிஞர் பெருமக்களின் ஆக்கப்புர்வ கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. முன்னதாக விழாவின் செயலர் உறையில் மருத்துவர் கூத்தரசன் சங்கத்தின் முப்பதாண்டுகளின் பதிவுகளை பாங்குடன் எடுத்துறைத்தார். தலைவர் இராசேந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு மரியாதை செய்து தொடக்க உறையாற்றினார். முடிவில் பொருளர் சச்சிதானந்தம் நன்றியுறை கூற விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment