Monday, February 23, 2009

சுற்றுச்சூழல் காக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்





சுற்றுச்சூழல் காக்கும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

சிற்றூர் முதல் மாநகராட்சி வரை சுற்றுச்சூழல் காக்கும் துப்புறவும் பணி முதன்மையானதாகும். காலம் காலமாக திடக்கழிவுகளை கையாளும் பணி பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்தச் சிக்களுக்கு தீர்வு காணும் விதமாக தமிழகமெங்கும் உள்ளாட்சித் துறையின் மூலம் அனைத்து பேரூராட்சிகளிலும் 2006þம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதனை தருமபுரி மாவட்டத்திலுள்ள பத்து பேரூராட்சிகளும் செயல்படுத்திவரும் நிலையில் கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டு, நல்ல முன்னுதாரனமாக திகழ்ந்து வருகிறது.

பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட கடத்தூர் நகரப் பகுதிகளில் துப்புறவுப் பணிகளை சீரமைத்து ஒழுங்குபடுத்த,, மக்களிடமும் விளிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும், குப்பை வண்டி வரும் நேரம், குறிப்பிடப்பட்டு முறை படுத்தப்பட்டிருக்கிறது. வீட்டிலேயே மடóகும் குப்பை தனியாகவும், மட்காத குப்பை தனியாகவும் பிரித்தெடுத்து துப்புறவுப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். குப்பை சேகரிக்கும் பணியில் இருபது மகளிர் தன் உதவிக் குழு உறுப்பினர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

நகரப் பகுதியை ஒட்டியுள்ள இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சேகரிக்கப்படும் திடக் கழிவுகளை உரமாக மாற்றும் கூடமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்த ஒன்றாகும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் புதிய கிடங்கு கட்டப்பட்டு, பிரித்தெடுத்த மட்கும் குப்பைகளை தனித்தனி அறைகளில் கொட்டி வைத்து, பஞóச கவ்யா கரைசல் கொண்டு பதினைந்து நாட்களுக்கு மட்க வைக்கப்படுகிறது. இதே போல் நான்கு அறைகளுக்கு மாற்றப்பட்டு அறுபதாவது நாளில், நன்கு மட்கிய தொழுவுரமாக சலித்து விற்பனை செயóயப்படுகிறார்கள்.

பேரூராட்சியில் நீண்ட காலமாக ஒட்டுநராக பணி புரியும் இராமசாமி இந்த இடத்தில் அண்ணா மூலிகைப் பண்ணை அமைத்து மிகச் சிறப்பாக பராமறித்து வருகிறார். நாற்பத்து மூன்று மூலிகைச் செடிகளை வைத்து வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் பயன்களையும் எழுதிவைத்து மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தேக்கு உள்ளிட்ட முப்பத்தி மூன்று மர வகைகளையும் நட்டு வளர்த்து வருகிறார்.

குப்பை மேடாக காட்சியளித்த இடத்தை சுற்றுச்சூழல் காக்கும் மூலிகை பூங்காவாக மாற்றியிருப்பதன் மூலம் கடத்தூர் பேரூராட்சியின் செயல்பாடுகள் மாவட்ட நிருவாகத்தின் பார்வையை தன்பக்கம் திருப்பியிருக்கிறது. இப் பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்து மேலும் விவரமறிய செயல் அலுவலர் திருஞானம் அவர்களை சந்தித்தபோது கீழ்கண்டவாறு தகவல்களை கூறினார்.

கடத்தூர் நகரை குப்பையில்லா நகரமாக்க அனைத்துப் பணியாளர்களும் ஒருங்கினைந்து மக்களிடம் நேரில் சென்று விளிப்புணர்வை ஏற்படுத்தõனோம். துண்டு பிரசுரங்கள் மூலம் மட்கும் குப்பையை தனியாகவும், மட்காத குப்பையை தனியாக பிரித்தெடுகóக உதவினோம். சுற்றுச்சூழல் காப்பதன் அவசியத்தை மக்கள் உணரும்படி செய்தோம். மக்களோடு மக்களாக களமிறங்கி, மகளிர் தன் உதவிக் குழுவினரோடு, ஒருங்கினைந்து நாள்தோறும் ஐநூறு கிலோ தொழுஉரம் தயார் செய்யும் நிலையை எட்டியுள்ளோம். மேலும் விரிவு படுத்தி மண்புழு உரக் கூடம் அமைக்க கட்டுமானப் பணியை செய்து வருகிறோம். நூறு சதவீதம் வரிவசூல் செய்வதற்க்காக தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த பேரூராட்சியாகவும், திடக்கழிவு மேலாண்மையை சிறப்புற செயல்படுத்தியதற்க்காக “சிறந்த பேரூராட்சி” யாகவும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் பெற்றதை பெருமையாக நினைக்கிறோம் என்றார்.

குப்பை மேட்டை பூங்காவாக மாற்றிய கடத்தூர் பேரூராட்சியின் செயல்பாடு மதிக்கத்தக்க ஒன்றாகும். சுற்றுச்சூழல் காக்கும் அரும்பணியில் தன்னை முழுவதுமாக அôóபணித்துவரும் பேரூராட்சி தமிழகத்திற்க்கு நல்ல முன்னுதாரனமாகும்.

No comments: