பாதுகாக்ககப்படாத பழமையான சிவன் (கோவில்) சிலை
நல்ல பாங்குடன் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை பாதுகாக்கப்படாமல், சிற்றூர் விவசாய நிலத்தில் எவ்வித பராமரிப்பும் இன்றி சிதைவடைந்து கொண்டிருக்கிறது. தொன்மையான இடங்களை பாதுகாக்கும் தொல்பொருள் துறையினர் இந்த சிலைகளை பாதுகாக்கமால் இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தருமபுரி நகரத்திலிருந்து 10 கி. மீட்டர் கிழக்காக அமைந்திருக்கும் மிட்டா நூல அள்ளி சிற்றூரில் உள்ள கோபாலஅள்ளி எனும் பகுதியில் கேட்பாரற்று இந்த சிலைகள் மழையில் நனைந்தும், வெயிலிலும் காய்ந்தும் பாதுகாப்பின்றி இருந்து வருகிறது. அருகாமையில குடியிருக்கும் சின்னசாமியிடம் இச்சிலைகள் பற்றி விசாரித்தபோது பின்வருமாறு தகவல்களை தெரிவித்தார். சோழர் காலத்தில் சோழேஸ்வரர் எனும் பெருமைவாய்ந்த கோவில் இருந்ததாக பாட்டனார் கூறியதைக் கேட்டிருக்கிறேன். என் தந்தையும் இந்த கோவிலை பார்த்தில்லையாம். இந்த சிவலிங்கத்தில் சிறுகற்களால் தட்டும்போது நெடுந்தொலைவிற்க்கு அப்பாலும் கனீரென்ற ஓசையை கேட்டிருக்கிறோமó.
இச் சிலைகள் அமைந்து இருக்கும் நிலத்தில் இயந்திரத்தின் மூலம் ஏர் உழும் போது இரண்டு அங்குல அளவிலான சிறிய செங்கற்கள் மேலெளுந்து வந்ததைப் சிறுவயதில் பார்த்திருக்கிறோம். இது இந்த நிலத்தின் அடிப்பகுதியில், பழமையான கட்டடம் இருப்பதற்கான அறிகுறியாகவே தென்படுகிறது. பாதுகாக்கப்படாத காரணத்தில் நந்தியின் காதுகள் மற்றும் தலைப்பகுதியில் சேதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் தொன்மை அறிந்து கோவில் எலுப்பப்பட்டால், இச்சிலைகள் பாதுகாப்பாக இருக்கும். தருமபுரி மாவட்டத்திற்க்கே இந்தச் சிவலிங்கம் முதன்மையானதாக இருந்திருக்கிறது.
பலத் தலைமுறைகளாக பாதுகாப்பில்லாமல் இருந்த போதிலும், பளபளப்புடன் இருப்பது, கற்சிற்பகலைக்கு நல்ல உதாரணமாக திகழ்ந்து வருகிறது. அன்மையில் வெளிநாட்டவர் இந்த இடத்தை பார்வையிட்டுச் சென்றிருப்பது குறிப்பிடத்தகது. எனினும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்தச் சிறப்புவாய்ந்த இடத்தை பாதுகாக்கத் தவறியது வேதனை அளிக்கும் செயலாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. வரலாற்று சிறப்பு மிக்க தகடூரில், ஒரு வரலாற்றுச் சின்னம் கேட்பாரற்று சிதைவடைந்து, மண்ணில் புதையுண்டுக் கிடக்கிறது.

No comments:
Post a Comment