தமிழர் கலைகளில் சிறந்த மாணவியர் இல்லம்
இன்றைய சூழலில் ஆன்மீகத் தலைவர்கள் என்றவுடன் அருளாசி வழங்குவதுடன், ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களை பற்றிய நினைவு வருபதை தவிர்க்க முடியவில்லை. அத்தகைய நிலையிலிருந்து மாறுபட்ட சிந்தனை ஓட்டத்தின் வடிவாக சுவாமி தயாணந்த சரஸ்வதி அவர்கள் செயல்பட்டுகó கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகக் கருத்துக்களை பலருடன் பகர்வதுடன், சிற்றூர்ப் புறப் பகுதிகளில் மாணவ மாணவியருக்காக இலவச உண்டு உறைவிடப் பள்ளிகளை நடத்திட வழியேற்படுத்தி கொடுத்திருக்கிறார். நாடெங்கும் எய்ம் பார் சேவா (அண்ம் ச்ர்ழ் நங்ஸ்ஹ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் எழுபத்தி ஆறு இல்லங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து நாற்பத்து எழவது கிலோ மீட்டரில் பாலக்கோடு வட்டத்திற்க்குட்பட்ட கோட்டூர் எனும் சிற்றூரில் 15þ5þ2009 அன்று மாணவர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமது சிறப்புறையில் மேலும் கூறியதாவது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த சிற்றூரில் மாணவியருக்கான இல்ல அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினோம். முதல் வருடத்திலேயே கட்டட வசதிப் பெற்று பள்ளி இடைநின்ற 35 மாணவியருடன் தொடங்கப்பட்டது. மாவட்ட நிருவாகம், இந்த அமைப்பின் சேவையை பாராட்டி, மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் கூடிய கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா (ஓஎஆய) மூலம் நூறு மாணவிகளை சேர்த்தது. மிகக் குறுகிய காலத்திலேயே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலó முதல் இரண்டு இடங்களை பிடித்து தேர்ந்துள்ளார்கள். இவ்வில்லத்தை நிருவகித்து வரும் பிம்மச்சாரினி பூங்கோதை அவர்களின் திறன்பட்ட சேவையின் மூலம் மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வருவதை காண முடிகிறது.
இம் மாணவியர் இல்லம், தமிழக அளவில் மாதிரி முன் மாணவியர் இல்லமாக திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மாணவர்களுக்கான தனி இல்ல அடிக்கல் நாட்டப்படுகிறது. இம்மாதிரியான இல்லங்கள் அகில இந்திய அளவில் எழுத்து ஆறு செயல்பட்டு வருகிறது. இவ்வில்லம் மாணவர்களுக்கான கோவில் வீடும் கோவில் தான். தேகமும் கோவில் தான். தனிப்பட்ட ஒவ்வொருவரையும் ஆண்டவராக பார்க்கிறோம். தினம் தினம் குளித்து தூய ஆடை அணிவது, கோவில் பூசை செய்வதற்க்கு சமமாகும். வீடு என்பது கிரகம், மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். வீட்டை கிரகலட்சுமியாக பார்க்கிறோம். இந்த இல்லத்து மாணவிகளைப் பார்த்தால் அந்த நிறைவு ஏற்படுகிறது.
அன்போடும், ஆர்வத்தோடும் தன்பணிகளை செய்துவந்ததனால் மாணவிகள் நிறைந்த மனதோடு இருக்கிறார்கள். இவர்கள் பிறந்த இடத்தில் அந்த மனநிறைவு ஏற்பட்டிருக்குமோ என்பது சந்தேகம். குடி என்பது ஒரு வியாதி, அதுவும் பெரிய வியாதி. குடிப்பவர்கள் தன்னை பாழக்குவதுடன், குழந்தைகளின் வாழ்வையும் சேர்த்து பாழக்குகிறார்கள். கோவைக்கு அருகில் மஞ்சகுழி எனுமிட்த்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்காக சிறப்பு முகாம் அமைத்து இக்கொடியப்பழக்கத்திலிருப்பவர்களை திருத்திக் கொண்டிருக்கிறோம். சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சாந்தி அவர்களின் குழு சிறப்பான சேவையை செய்து வருகிறது. தருமபுரி மாவட்டமும் குடிப்பழக்கத்தால் சிதைந்துக் கொண்டிருப்பதனால் ஐம்பது நபர்கள் பங்கேற்க்கும் முகாம் விரைவில் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
அரசை முழுவதுமாக நம்பிக்கொண்டிருக்காமல், நம்மை நாமே சீர்படுத்திக்கொண்டு செயல்படவேண்டும். உண்மையோடு செயல்படும் நபர்கள் குறைந்து வருகிறார்கள். பானையிலிருந்து எடுக்கும் அகப்பைக்கு பசி எடுக்கக்கூடாது. அகப்பைக்கு பசி எடுத்தால் பரிமாறுவதற்க்கு மிச்சம் இருக்காது. அதைப்போலத் தான் இன்று தன்னார்வ தொண்டு நிருவனம் என்ற பெயரில், அவர்களே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெரும் அரசானையில் மட்டுமே தொண்டு நிறுவனம் என இருக்கிறது. செயல் வடிவத்தில் காண்பிக்க முடியவில்லை.
பிறர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உலகமே இன்புற்று இருக்க வேண்டும் என்பதை அடையாளம் நம் பண்பாடு நம்முடன் சேர்ந்து சமூகத்தில் கவணம் செலுத்தும் எண்ணம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். எந்த ஒரு பொருளை பிறருக்கு அளித்தாலும் மிகுந்த அக்கறையுடன் கொடுக்க வேண்டும். கொடுப்பவயரும், வாங்குபவரும் சந்தோசப்படும்போது இருவருக்கும் நன்மை பயக்கும். பிறருக்கு கொடுப்பது தாணம், தாணமில்லாதது வியாபாரம். உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் பரந்து விரிந்திருக்கிறார்கள். அதனால் தான் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் போது மீனவப் பெருமக்களுக்காக படகுகள் செய்து கொடுக்க முடிந்தது.
விழாவில் கலந்து கொள்வதற்க்காக, எமிரேட்ஸ் நாட்டிலிருந்து ஜிம்மி கார்டர் வந்திருந்து பல்வேறு நலதிட்டங்களுக்கு நிதி உதவி அளித்தார். விழாவின் முத்தாய்ப்பான தயா கிராமிய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப் படுத்தியது. மெல்ல மெல்ல அழிவின் விளிம்பிற்க்கு சென்று கொண்டிருக்கும் தமிழர் கலைகளான கரகாட்டம், கோலாட்டம, தப்பாட்டம், உடுக்கையாட்டமென மாணவியர்களின் கலைக்குழு பாங்குடன் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.
பள்ளிப் படிப்பை தொடர்ந்து படித்து கொண்டிருக்கும் மாணவ பருவத்தினரிடம் ஒழுக்கம் பண்பாடு, சிதைந்துக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இவ்வில்ல மாணவிகள் பல்வேறு குடும்ப சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் இடை நின்றவர்கள். அவர்களை இவ்வில்லத்தில் பராமரித்து கைத்தொழில்களையும் கற்பித்து, தமிழர் கலைகளைகளிலும் கைத்தேர்ந்தவர்களாக்கிய பிரம்பசாரினி பூங்கோதையின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பெட்டிச் செய்தி
இவ்வில்லத்தில் தங்கி எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி சாலா தனது அனுவத்தை கூறும்போது நான் என்னுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து கட்டடப் பணிகளில் ஈடுபட்டுவந்தேன். எங்கள் ஊர் திருவிழாவிற்க்கு வரும்போது, உறவினர் மூலம் இவ்வில்லத்தில் தங்கி பயிலும் நிலை உருவானது. என் தந்தை குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாக இருந்த காரணத்தால், என்னை படிக்க வைக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் நான் மேல்படிப்பு படித்து காவல் துறையில் அலுவலராக பணியாற்றுவதை விரும்புகிறேன். இதன் மூலம் நாட்டில் குடிப்பழக்கத்தை ஓழிப்பதற்க்கு பாடுபடுவேன். என உணர்ச்சி மேலிட கூறியதை கேட்ட பார்வையாளர்கள் மாணவியிடம் இருந்த சமுதாய தாக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
Wednesday, May 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment