Monday, February 23, 2009

தீர்த்தமலை ஓர் பயணப் பதிவு








தீர்த்தம் பொழியும் தீர்த்தமலை ஓர் பயணப் பதிவு

ந்தியாவின் புன்னியத் தலங்களில் ஒன்றாகவும், தருமபுரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது தீர்த்த மலையாகும். பல்வேறு அவதாரங்களில் பல இடங்களில் குடிகொண்டிருக்கும் சõவபெருமான் இங்கு தீர்த்தங்கரேசுவரர் எனும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்திற்க்குச் சென்றுவர தருமபுரியிலிருந்தும், அரூரிலிருந்தும் நேரடிப் பெருந்து வசதி உள்ளது. தருமபுரியிலிருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் 60 வது கி. மீட்டரில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

மலைப்பகுதியில் நடந்துச் செல்வதற்க்கு வசதியாக கற்காரையிலான சாய்தளமó அமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஐனூறு அடி உயரத்தில் அமைந்திருக்குமó மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில், ஆங்காங்கே நடை மேடை மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலைப்பாதையின் இருபுறத்திலும், வயதானவர்களும், சாமியார்களும் பக்தர்களின் காணிக்கைக்காக ஆங்காங்கே காணப்படுகிறார்கள். இங்கு இறைவி அருள்மொழி வடிவாம்பிகை உடனுறை தீர்த்தங்கரீஸ்வரர் சிவலிங்க வடிவமாக சிவபெருமான எழுந்தருளியுள்ளார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்திற்க்கு இராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் வந்து சென்றதாக கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறது. இராமபிரான் இப்பூவுலகில் அவதாரம் செய்தவுடன் இரண்டு திருத்தலங்களில் சிவபெருமானை வழிப்பட்டதாக புராணத்தில் கூறப்படுகிறது. அவைகள் இரமேஸ்வரம் மறóறும் தீர்த்தமலை ஆகும்.


இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் தீர்தóதம், குமார தீர்தóதம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம் மற்றும் அகஸ்தியர் தீர்த்தம் ஆகிய ஐந்து புன்னிய தீர்த்தங்கள் வற்றாமல் வளிந்தோடிக்கொண்டிருக்கின்றன. இத்தீர்த்தங்கள் உருவான விதத்திற்க்கு பல்வேறு புராணக் கதைகள் கூறுப்படுகிறது. அதன்படி இத்தலத்திற்க்கு வரும் பக்தர்கள் அரூரிலிருந்து ஊத்தங்கரை செல்லும் வழியில் பத்தாவது கி. மீட்டரில் அமைந்திருக்கும் அனுமன் தீர்த்தம் எனும் திருக்கோவிலுக்கு சென்று தீர்த்தலை வந்து தீர்த்தங்கரீஸ்வரை வணங்கினால் முழுப்பலனையும் அடையலாம் என்பது ஐதீகம்.

இத்திருத்தலத்தில் உயரமான இடுக்கிலிருந்து எந்நாளிலும் வற்றாமல் நீர்ஊற்றுப் பெருக்குடன் வளிந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் குளித்தவுடன் மனதில் இருக்கும் பாரம் இறங்கிய உணர்வுடன் புதிய எழுச்சியடைவதை இங்குவரும் பக்தர்கள் மனப் பூர்வமாக உணர்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை குடிக்கும்போது உடலினுள் புத்துணர்ச்சி உருவாவதை உணர முடிகிறது.


இராண்டாயிரமாம் ஆண்டில் இம்மலைப்பகுதியில் ஏறóபட்ட நிலநடுக்கத்தாலும், நிலச்சரிவினாலும், இக்கோவிலும் பாதையும் சிறிதும் பாதிக்கப்படாதது வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இம்மலைக்கோவிலின் மறுப்பக்கத்தில் இருந்த நிலப்பகுதி மலையாகவும், மலைப்பகுதி நிலமாகவும் மாறிவிட்டது. மேலும் பல சிறப்புகள் வாய்ந்த இம்மலையில் சித்தர்கள். ஞானிகள், யோகிகள் வாழ்ந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில அருணகிரி நாத சுவாமிகளால் பாடப்பட்ட ஒரேத் திருத்தலமாக சிறப்புடன் விளங்கிவருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாதது பக்தர்களை சிரமத்துக்குள்ளாக்குகிறது. ஆண்கள், பெணóகள் தனித்தனியே ஆடை மாற்றிக் கொள்ள ஏதுவாக தடுப்புச் சுவர்கள் எழுப்பினால் நன்றாக இருக்கும். மேலும், கழிப்பிட கட்டமைப்பை ஏற்படுத்தி சுற்றுபுறத்தை பாதுகாக்க மாவட்ட நிருவாகம் முன்வர வேண்டும்.

அடர்ந்த வனப்பகுதியில் இயற்க்கை எழில் கொஞ்சும் இந்த மலைத் திருத்தலத்திற்க்கு சென்று வந்தால் மனதில் இதமான உணர்வு பிறப்பதை உணரமுடிகிறது. வாழ்வில் வளம்பெற இத்திருத்தலத்திற்க்கு தவறாமல் செல்வோமாக.

7 comments:

Rajesh. CTR said...

Hello Naren, Thanks for your post on Theertha malai. It is a new and exiting temple to know about. i have used your photos and description of the temple on my blog post
http://hill-temples.blogspot.com/2009/11/theertha-malai.html

Hope u would like it.

Thanks and regards,
CTR.Rajesh

Prof.A.Santharam said...

Hello Naren, Useful info. But there are lot of mistakes in Tamil-- for example--"Punniya", "Vazhindu" are wrongly written. Please correct them.
Regards, Prof.A.Santharam

venkachal2012 said...

அருமை

venkachal2012 said...

அருமை

Unknown said...

அருமை மேலும் தகவல்கள் உண்டா

Unknown said...

அருமை மேலும் தகவல்கள் உண்டா

Unknown said...

அருமை