நெஞ்சில் நிலைக்கும் வி.பி.சிங் (1931 þ 2008)
தமிழக மக்களின் மூட நம்பிக்கைகளை அறுத்தெரிந்து, சமூக நீதிக்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சமூக நீதியை நிலைநாட்டியவர் முன்னால் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்.
மண்டல் கமிசன் அறிக்கையினை செயல்படுத்தியதன் மூலம் தனது தலைமையிலான ஆட்சியை துறந்தவர். மதவெறியாட்டம் மூலம் ஆட்சி பீடத்தில் அமரத் துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி வி.பி.சிங் அவர்களின் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மண்டல் கமிசன் மூலம் விலக்கிக் கொண்டதை நாடரியும். நாடு முழுவதிலுமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் வி.பி.சிங் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நினைத்துப் பார்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இன்றைய இளைஞாóகள் நடுவன் அரசு வேலைவாய்ப்பில் இருபத்தி ஏழு சதவீதம் பெறக்கூடிய உன்னத நிலையை ஏற்படுத்திய உத்தமர்.
நீண்ட காலமாக உடல் நலக் குறைவாக இருந்தபோதிலும் அவ்வப்போது பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியவர் கடந்த நவம்பர் 29þம் நாள் நம்மை விட்டு பிரிந்தார். நிசாப் புயல் தாக்கம், மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற செய்திகளால், வி.பி.சிங் அவர்களின் மறைவு மக்களிடையே மறைக்கப்பட்டு விட்டது. ஆதிக்கச் சக்திகளின் பிடியில் இருக்கும் பெரும்பான்மையான செய்தி ஊடகங்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டன.
யாரகினும் தவறே செய்திருந்தபோதிலும், அவர் இறந்த பிறகு அவரின் நல்ல செயல்களை சீர்தூகóகி பார்பதுதான் மனிதச்செயல். ஆனால், மேல்தட்டு மக்களால் வாசிக்கப்படும் இந்தியா டுடேþவின் தமிழ்ப் பதிப்பில் (டிசம்பர் 17,2008) வி.பி.சிங் அவர்களை மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவாó எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டதன் மூலம் தன்னை சிறுமை படுத்தியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட தமிழர் நலனுக்காக வாழ்ந்த தலைவரை தமிழில் ஒரு பத்திரிக்கை இவ்வளவு தரம் தாழ்ந்து எழுதி வெளியிடுவதை தமிழன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தரமான தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்சனம் செய்யும் விசம பத்திரிக்கைகளை உணர்வுள்ள தமிழர்கள் உதரித்தள்ள வேண்டும். வாழ்க வி.பி.சிங் புகழ்! வளர்க அவரின் சமூகப் பார்வை!
Friday, December 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உங்கள் blog நன்றாக உள்ளது.ஆங்காங்கே தென்படும் எழுத்துப்பிழைகளை களையவும்.
விரைவில் நல்ல பதிவாளர் என்ற முத்திரை கிடைக்க வாழ்த்துக்கள்.நண்பன் ரவி.
raviparthana@gmail.com
www.avasaramda.blogspot.com
Post a Comment