Friday, December 12, 2008

மகாத்மாவை போற்றுவோம்

மகாத்மாவை போற்றுவோம்

அகிம்ச்சை என்ற சொல்லிற்க்கு இலக்கணமாய் வாழ்ந்து அகிலத்தில் உயர்ந்தவர் உத்தமர் அண்ணல் காந்தியடிகள் ஆவார். மனிதர்கள் எல்லாம் ஆத்துமாக்கலாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வையத்தில், மகா ஆத்துமாவாக மக்கள் மனதில் நீக்கமற என்றும் நிறைந்திருப்பவர் நம் காந்தியடிகள்.

குசராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தாலும், அகிலம் போற்றும் மகாத்மாக உருவெடுத்து, இந்திய தேசத்தின் விடுதலைப் போரட்டத்தை அகிம்சை வழியில் நடத்தியவர். எளிய வாழ்க்கை முறையை பின்பற்றி, வாழும் மக்களுக்கு முன்னுதாரனமாய் வாழ்ந்து காட்டிய உத்தமர். எந்த உயிருக்கும் துன்பமளிக்கா உயரிய கொள்கையை கொண்டவர்.

தங்களின் செயல்களால், மனிதர்களே மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அண்ணல் காந்தியடிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. காந்தியடிகளின் அறிவுரைகள் அனைத்தும் மக்களை பண்படுத்தும், சிந்தனையை நிறைந்தனவாக போற்றப்படுகிறது.

மக்களைப் ஒருமைபடுத்தி மகானாக மாறிய காந்தியடிகளை கடவுளாக பாவித்து, கோவில் கட்டி பூசை செய்வதை ஒரு சில இடத்தில் பார்க்கிறோம். இந்தக் செய்தியை அறியும்போது காந்தியவாதிகள் கண்ணீர் சிந்துகிறார்கள். காந்தியச் சிந்தனைகள் வேறு, கடவுள் நம்பிக்கை என்பது வேறு. இதையறியாமல் காந்திக்கு கோவில் கட்டி பூசை செய்யும் மடமையை போக்க நம்மிடையே காந்திமகான் இல்லாதது, வருநóத தக்கச் செயலாகும். மக்கள், மனித சக்திக்கு மீறிய செயல்பாடுகளை கடவுள் என்ற பெயரால் வழிவழியாய் வழிபடóடுக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும் வாழ்ந்த பூமி நம் தமிழ்நாடு என்பதை நாமாறிவோம். அத்தகைய மகான்கள் காலடிப்பட்ட பூமியில், காந்தியடிகளுக்கு கோவில் கட்டி, பூசைகள் செய்வது, அவரது கொள்கைகளை புதைக் குழிக்குள் போட்டு புதைக்கும் பாதகச் செயலாக எண்ணத் தோன்றுகிறது.

பொதுவாக கோவில் என்றவுடன், எனக்கு இதைக் கொடு என்று கேட்கும் மனோபாவதóதிலேயே பெரும்பாலோர்கள் இருக்கிறார்கள். காந்தி வேறு கடவுள் வேறு என்ற பகுத்தறிவு இல்லா மக்களை பார்க்கும்போது மனம் பதைக்கிறது. மன நிம்மதிக்காகவும், ஆறுதலுக்காகவும், வேண்டுதலுக்காகவும் கோவில்களில் நிகழ்த்தும் வாழிபாடுகளை காந்தியடிகளுக்கு செய்வதன் மூலம் அவரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டோமென எண்ணத் தோன்றுகிறது.


காந்தியடிகளின் ஆர்வலர்கள். அவரின் கொள்கைகளó மக்களிடம் நிலைத்து நிற்பதற்க்கு தீர்க்கமான வழிகளை காணவேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திடும் வண்ணம், காந்தியடிகளின் ஒவ்வொரு சிந்தனைத் துளிகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காந்தியடிகள் பெயரில் அரங்கம் அமைத்து அதில், மாதம் ஒரு முறை சொற்பொழிவுகள் நிகழ்த்தி, அவரின் கொள்கைகள் அடங்கிய நூல்களை படிக்க வசதி செய்யலாம். நூலகம் அமைத்து காந்திய கொள்கைகளை மக்கள் மனதில் நிலைத்திருக்க வழிவகைச் செய்யலாம். காந்தியடிகளை கடவுளாக்கி மக்களை மூடர்களாக்கும் மடமையை, காந்தியவாதிகள் புதிய சத்தியாகிரக மேற்கொல்வதன் மூலம் முறியடிக்க வேண்டும்.

No comments: