Friday, December 12, 2008

போலியான புதுவருட கொண்டாட்டம்

போலியான புதுவருட கொண்டாட்டம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் நனóநாளை கோலாகலமாக மேற்கத்திய நாட்டினர் வழக்கமாக கொண்டாடி மகிழ்கின்றனர். தொலைத்தொடர்பு வளர்ச்சி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிபுரிந்ததன் காரணமாய் சனவரி முதன் நாள் கொண்டாட்டம் இந்திய நாடெங்கும் சிறப்புற கொண்டாடப்படுகிறது.

ஆங்கில வருட கடைசி நாளான டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் நாளன்று இரவு முழுவதும் சாலைகளில் நண்பர்கள் படை சூழ, பலப்பல குழுக்களாக விதவிதமாக கொண்டாடி மகிழ்கின்றனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களி, இந்த வகையான கொண்டாட்டங்கள் சமூக பெரும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்துமென சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. மேலும், சாலைகள் தோறும் திறந்தவெளி மதுக்கடைகளாய் மாறும் அவல நிலை ஏற்படுகிறது. மனிதம் போற்றுமó மானுட பண்பாட்டின் மூலம் அன்புடன் வாழ்த்துக்கள் கூறும் முறை மாறி, வன்முறை வெறியட்டங்கள் அரங்கேறும் கேலி விளையாட்டு நிகழ்வாகி வருகிறது.

இணையத்தின் வளர்ச்சியாலும், தொலைத்தொடர்பு முன்னேற்றத்தாலும், புத்தாண்டு, இந்தியப் பண்பாடு மழங்கடிக்கப்பட்டு, வருகிறது. கொண்டாட்டம் இளைய சமூகத்தினரை சீரழித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளும், செய்தி ஊடகங்களும் இளைய சமூகத்தினரை கவரும் வகையில் காட்சிகளை அமைத்து மாய வலையை விரித்துக் புத்தாண்டுச் கொண்டிருக்கின்றனர். வைத்துவிடுகின்றனர். வருந்தோறும் நடைபெறும் இந்த கொண்டாட்டங்கள் அத்துமீறி செல்வதால், காவல்துறை தலையிட்டு கட்டுபடுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மதுவின் மயக்கத்தில், இளமையில் வேகத்தில் இவர்களை அறியாமல் செய்யும் செயல்கள் விபரீதத்தõன் எல்லைக்கு சென்றுவிடுகிறது. சட்டம் ஒழுங்கை பராமறிக்க காவல் துறைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கெனவே தீவிரவாதிகளாலும், பயங்கரவாதிகளாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் இத்தகைய கொண்டாட்டங்களை பொதுஇடங்களில். அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழாவண்ணம் தடுத்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.



கணணித் துறையின் வளர்ச்சியால், இனையத்தின் மூலமாக கைபேசி குருஞ் செய்தியைப் பயன்படுத்தி வாழ்த்துக்களை பலருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதை விடுத்து, இரவு முழுவதும் தெருவில் கூடி பொது இடத்தை அசிங்கப்படுத்தும் போலியான ஆங்கில புதுவருட கொண்டாட்டத்தை காவல்துறை கட்டுபடுத்த வேண்டும். கட்டுபாடு இல்லாத வாகன ஒட்டிகளால் இந்த நாளில் பல்வேறு சாலை விபத்து ஏற்படுவதுடன் உயிர்ச் சேதமும் ஏற்பட்டு விடுகிறது.

இதமான அன்புப் பரிமாற்றம் எல்லை மீறி அடுத்தவர்களை துன்புறுத்தும் கொடூர கொண்டாட்டங்கங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் பொருட் சேதமும், உயிர்ச் சேதமும் வருடத்திற்க்கு வருடன் அதிகரித்து வருகின்றன. கடைகோடி மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் கைபேசியை பயன்படுத்திக் கொண்டிருகóகும் இந்த நாளில், பொது இடங்களில் அத்துமீறும் போலித்தனமான புத்தாண்டு கொண்டாட்டத்தை வறைமுறைப் படுத்த வேண்டும். வன்முறை கொண்டாட்டங்களை விட்டொழிக்க இளைய தலைமுறையினருக்கு சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தி ஊடகங்கள் சிந்திக்கவேண்டும். புதுவருட நாளில், அரசு அலுவலக உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற வரிசையில் காத்திருக்கும் பரிதாப நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசு விடுமுறை நாளாக இருந்த போதிலும், உயரதிகாரிகளை பல மணி நேரம் காத்திருந்து தங்களின் நேரத்தை வீனடிக்க வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அரசு அலுவலர்கள் இந்த நடைமுறையை தரமாக முன்வந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பலபேர்களின் நேரத்தை வீனாக்குவதை தவிர்ப்பதுடன் மனதார நல்வாழ்த்துக்களையும் நாள்தோறும் பெறலாம்.

புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு நாளில் முடிந்துவிடும் போலித்தனத்தை மாற்று புதுவகையான முறையை புகுத்தவேண்டும். வாடிய பயிரைக் கண்டு வாடிய அருட்பெரும் வள்ளலார் வாழ்ந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழத்தெரியாமல் தவித்துக் கொண்டிருப்போருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிச்செய்து புதுவாழ்வு கிடைக்கச் செய்தால் அதுவே உண்மையான புதுவருட கொண்டாட்டமாகும். மனிதம் போற்றும் மக்கள் விழாவாக உருமாற வேண்டும். மண்ணில் மனித நேயம் மலரவேண்டும். போலித்தனமான வாழ்க்கை முறை மாறி வாழ்வில் புத்தொளி வீசி வசந்த வாசல் திறக்க வேண்டும். அதுதான் நாட்டு மக்களின் உண்மையான புதுவருட கொண்டாட்டமாகும்.

நல்லன நினைக்கு நெஞ்சங்களுக்கு நாலெல்லாம் இனிய நாளே. . நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து உலகத்தில் என்றென்றுமó வாழ்வோமாக.

No comments: