முயற்சியே முன்னேற்றும்

முயற்சியே முன்னேற்றும் 

காலை நேர பேருந்து பயணத்தில், கதிரேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் பள்ளிக்கு செல்லும் மாணவன் அமர்ந்திருந்தான். 

பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, காலியாக இருந்த பேருந்தின் இருக்கைகள், அடுத்தடுத்து வந்தவர்கள் அமர்ந்ததனால், நிறைவடைந்தது.

 தொடர்ந்து வந்த ஒவ்வொரு நிறுத்தங்களிலும் இறங்குபவர்கள் குறைவாகவும், ஏறுபவர்கள் அதிகமாகவும் தென்பட்டார்கள்.

 ஒன்று இரண்டு நிறுத்தங்கள் சென்றவுடன், பள்ளி மாணவன் கதிரியேசனையே உற்று பார்த்துக் கொண்டே பயணித்தான்.

 கதிரேசன் தன் சிந்தனையில், பேருந்து பயணத்தை விட வேகமாக பயணித்துக் கொண்டிருந்தார்.

 ஒரு கட்டத்தில் கதிரேசனிடம், அந்த பள்ளி மாணவன், தன் காலுக்கு இந்த பேண்டேஜை சுற்றி விட முடியுமா? என்று கேட்டான்.

 இதுவரை இப்படி ஒரு செயலை செய்யாத கதிரேசன், தனக்கு தெரியாது, வேறு தெரிந்தவர்களிடம் நீ போட்டுக் கொள், என்று கூறிவிட்டார்.

 சரி என்று அந்த பேண்டேஜை  பையில் வைத்து விட்டு, மாணவன் அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்கு சென்று விடலானான்.

அடுத்து ஓரிரு நிறுத்தங்கள் சென்றவுடன், மாணவனே தன் பையில் இருந்த பென்டேஜை எடுத்து, ஒரு காலை இன்னொரு கால் தொடை மேல் வைத்து, லாவகமாக படிமம் போல அடுத்தடுத்த நிலைகளில், அவனே சுற்றி பக்குவமாய் போட்டுக் கொண்டான்.

 அந்த பேண்டேஜ் சுற்றிய விதம் நேர்த்தியாகவும், பொருத்தமாகவும் இருப்பதை கதிரேசன் கண்டார்.

 பேருந்து சென்று கொண்டிருக்கும் அந்த சூழலில், அந்த மாணவனே, அவன் காலுக்கு சுற்றிய விதம் கதிரேசனுக்கு ஆச்சரியம் கலந்த ஒரு செய்தியை தந்தது.

 எந்த ஒரு செயலையும், நம்மால் முடியும், நம்மால் செய்ய முடியும், நாம் தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு செய்ய நினைத்தால், அதனை நேர்த்தியாக செய்து முடிக்க முடியும், என்பதை பள்ளி மாணவன் தன் செயல் மூலம் கதிரேசனுக்கு பாடம் கற்பித்தான்.

 எனவே, எல்லோரும் இங்கு கற்றுக் கொள்பவர்களாகவே இருக்கிறோம், என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 எந்த செயலாக இருந்தாலும், மனதிடத்துடன் முயற்சி எடுக்கும்போது, அந்தச் செயல் வெற்றி அடையும், இதுதான் நாம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்.



You may also like

No comments: