Wednesday, October 5, 2011

கோதுமை சாகுபடி

கோதுமை சாகுபடி



“கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் ” -- -என

மகாகவி பாடலில் கூறுமளவுக்கு, வட மாநிலங்களில் அதிக அளவில் கோதுமை சாகுபடி செய்து வருவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், சமவெளிப்பகுதிகளான தமிழக மண்ணிலும் உணவுப் பயிரான கோதுமையை பயிரிட்டிருக்கõறார் தருமபுரி வேளாண் அலுவலர் வி. குணசேகரன்.

அன்மையில் அவரைச் சந்தித்து கோதுமை சாகுபடி தொழில் நுட்பம் பற்றி கேட்டறிந்தோம். அதன் விவரம் பின்வருமாறு 1800 ஆம் ஆண்டில் சேலம் பாராமகால் பகுதியை ஆண்ட ஆங்கிலேய ஆட்சியர் கர்னல் ரீடு எழதியிருக்கும் குறிப்புகளில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கோதுமை விளைந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், 1905 -ல் ரிச்சர்ட்ஸ் எனும் ஆட்சியரும் கோதுமை சாகுபடி பற்றிய குறிப்பை எழுதிவைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழக மண்ணில் கோதுமை விளைவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆதாங்களைப் பார்த்த பிறகு, என்னுள் இருந்த தூண்டுதல் காரணமாக கோதுமையை பயிர்செய்து அறுவடை செய்தோம் .

தமிழத்தில் தருமபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, கோவை மற்றும் தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலó, நவம்பர் 15 - க்குள் கோதுமை சாகுபடி செயóய ஏற்ற பருவமாகும். ஏர --3094, ஏஈ-2833 ஆகிய இரண்டு ரொட்டி கோதுமை வகைகள், சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட, 40 கிலோ கோதுமை போதுமானது. 95 முதல் 105 நாட்களில் மகசூல் கொடுப்பதனால், 5 முதல் 6 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

மேற்கண்ட இரு ரகங்களும் துரு நோயினை எதிர்த்து வளரும் வல்லமை கொண்டது. அதனால் பூச்சித் தாக்குதல்கள் அவ்வாளவாக இருப்பதில்லை. எலிகள் மற்றும் அனில் போன்ற பறவைகளிடமிருந்து கோதுமை விளையும் தருனத்தில் காப்பது அவசியம்.

நன்கு முற்றிய கோதுமையை கதிர் அடிக்கும் இயந்திரம் மூலமும், ஆட்கள் உதவியுடனும் பிரித்தெடுத்துக் கொள்ளலாம். வளமான சூழ்நிலையில் வளர்ந்தால், ஏக்கருக்கு 2000 கிலோ அறுவடைச் செய்யலாம்.


சமதளப் பகுதிகளில் நவம்பர் 15 க்குள்ளான பருவம் சிறந்தது. கோடை வாழ் இடங்களான நீலகிரி ஏற்காடு போன்ற இடங்களில் பணி படர்ந்த சூழலில் வருடம் முழுவதும் பயிரிட்டு பயன்பெறலாமென வேளாண் அலுவல் குணசேகரன் விவரித்தார்.

கோதுமை சாகுபடிச் செய்ய ஆகும் செலவு நெற்பயிரை விடவும் குறைவு. மேலும், தண்ணீர் பாயிச்சும் அளவும் குறைவு. தண்ணீர் பற்றாக்குறையாலும். மின்சார பற்றாக்குறையாலும் தவித்துக் கொண்டிருக்கும், தமிழக விவசாயிகளுக்கு சரியான மாற்றுப் பயிர் கோதுமை. இதை உணவுப் பயிராகும். பணப் பயிராகவும் தமிழக அரசு விவாசயிகளுக்கு விளிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும், தமிழக பூமியில் கோதுமை விளைவிப்பதன் மூலம், தமிழக அறவை ஆலைகள் வடநாட்டு கோதுமையை எதிர்பார்த்துக் கொண்டிராமல், நம்மூர் மக்கள் விளைவிக்கும் கோதுமையை அரைத்து குறைந்த விலையில் வினியோகம் செய்யும் வாய்ப்பும் ஏற்படும்.

நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் அமைந்திருக்கும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோதுமை சாகுபடிக்கு தேவையான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விளிப்புணர்வு கொடுத்து விவசாயிகளுக்கு தேவையான கோதுமை விதையை அளித்து வருகிறது.

வழக்கமான நெல். கரும்பு போன்ன்ன்ற பயிர்களையே சாகுபடிச் செய்து கொண்டிருக்கமால் தமிழக விவசாயிகள் மாற்றுப் பயிரான கோதுமையை பயிரிரிரிட முன்வரவேண்டும். கோதுமை விதையை மானிய விலையில் தமிழக அரசு வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேணóடும். உடல் தேய்வு நோய்ளிக்கு அடுத்த நிலையில் மக்களை அச்சுறுத்தி வருவது சர்க்கரை நோயாகும். இந்நோயாóகள் சாப்பிடக் கூடியது கோதுமை மற்றும் இராகி கலந்த உணவு வகைகள். பெரும்பாலான மக்களுக்கு தேவையான கோதுமையை நாம் விளைவிக்காமல், வடமாநிலங்களிடம் கையேந்தி நிற்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

“ என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ’’ எனும் பாடல் வரிகளை நினைத்துப் பர்ôத்து, நம் தமிழக மண்ணில் கோதுமை சாகுபடி செய்து வளமான தமிழகம் உருவாக தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments: