மலருக்கு மணமுடிக்கும் தேனீக்கள்.
தேன், தேனீக்கள் பற்றி நாம் அறிந்த போதிலும் தெயாத பல விந்தை மிகு செயல்கள் . அதனுள் புதைந்து இருக்கின்றன. தேனுக்கினையான உணவு இந்த உலகத்திலேயே உருவாக்கப்படவில்லை. அதே போல் தேனீக்களின் ஒவ்வொரு செயல்பாடும் மனிதனால் புந்துகொள்ளமுடியாத புதிராகவே புலப்படுகிறது. தேனீக்களின் அசைவுகள் மற்றும் அதன் செயல் பாடுகள் பற்றி தேனீ வளர்ப்பு ஆர்வலரான திரு குணசேகரன் அவர்களிடம் கேட்டறிந்தது.
தேனீக்களின் அதி முக்கியமான பயன்பாடாக நமக்குப் புலப்படுவது மகரந்த சேர்க்கை என்னும் மகத்தான செயலாகும். மகரந்த சேர்க்கையின் மூலம் மகசூலைப் பெருக்கி உழவர்களுக்கே தெயாமல் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன்மகரந்த சேர்க்கை மற்றும் அயல்மகரந்த சேர்க்கைகளால் அனைத்துப் பயிர் வகைகளும், பூவில் தொடங்கி, காயாகி, கனியாகி மக்களுக்கு உணவாகிறது. அயல் மகரந்த சேர்க்கையில் அதி முக்கியப் பணியை செய்துவருவது தேனீக்கள் .
மலர்களும் , தேனீக்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இணையாக தோன்றியவையாகும். ஒன்றோடு ஒன்று உறவாடும் உன்னத உறவை இயற்கையாகவே பெற்றிருக்கிறது. இதைத்தான் அறிவியல் அறிஞர்கள் மகரந்தச்சேர்க்கை என்று கண்டறிந்திருக்கிறார்கள். சாதரணப் பயிர்ச் சாகுபடியை விட தேனீக்களின் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் போது பலமடங்கு உற்பத்தி பெருகி, பலன் தருவது இயற்கையின் அதிசயமாகும்.
தேனீக்களைக் கவர வண்ண வண்ண மலர்கள், வகை வகையாய் காட்சியளிக்கிறது. மலர்கள் மட்டும் இருந்தால் போதாது, உணவாக மகரந்தமும், தேனாக இனிப்புத் திரவமும் தேனீக்களை ஈர்க்க மலர்கள் இயற்கையிடமிருந்து பெற்றிருக்கின்றன.
மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், மலர்கள் மலர்களாகத் தான் இருக்கும், உணவாகாது, உற்பத்தியும் பெருகாது. நல் விதை, உரம் , போன்றவைகளுடன் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை உணவு உற்பத்திக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அயல் நாடுகளில் தேனீக்களை தனியார் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு, விவசாயிகளின் பழத் தோட்டங்களில் மகரந்த சேர்க்கை நடத்தி மகசூல் பெருக்க தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான வாணிபமாகவே நடந்து வருகிறது. ஆனால், நம்நாட்டில் தேனை மட்டுமே உண்ணத் தெந்து, தேனீக்களின் மகரந்த சேர்க்கையை அறியாமலேயே இருந்து வருகிறோம். விளை நிலங்களில் செயற்கை நஞ்சுகளை அதிக அளவில் பயன்படுத்தியதனால் நம்மையறியாமலேயே தேனீக்களை துரத்திவிட்டோம்.
தேனீ வளர்ப்பிற்கு மிகப் பெரிய முதலீடு ஒன்றும் தேவையில்லை. அதனால் மத்திய, மாநில அரசுகள் தேனீவளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தேனீக்களிடமிருந்து தேனைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் பொறுமை, அமைதி, சுறுசுறுப்பு போன்ற வாழ்க்கைப் பாடங்களையும் நாம் கற்றுக் கொள்ளலாம்.
தகடூர் நரேன் -
Friday, November 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment